குடியரசு தின விழா: காவிரி ஆற்று பாலத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார்


குடியரசு தின விழா: காவிரி ஆற்று பாலத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார்
x
தினத்தந்தி 25 Jan 2022 9:14 PM GMT (Updated: 25 Jan 2022 9:14 PM GMT)

குடியரசு தின விழா: காவிரி ஆற்று பாலத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார்

ஈரோடு
இந்திய குடியரசு தினவிழா இன்று (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. 
ஈரோடு மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தலைமையில் போலீசார் சிறப்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதுபோல் ஈரோடு ரெயில் நிலையத்திலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த 2 நாட்களாக ரெயில் நிலையத்துக்கு வந்து செல்லும் பயணிகளின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டு வந்தன. மோப்பநாய் மூலமும் சோதனை செய்யப்பட்டது. சரக்கு முனையத்துக்கு வரும் பொருட்கள், பார்சல்கள் சோதனை செய்யப்பட்டன.
நேற்று ஈரோடு வெண்டிபாளையம் காவிரி ஆற்று ரெயில்வே பாலத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.

Next Story