களக்காடு கீழப்பத்தை வார்டு மறுவரையறையை மறுபரிசீலனை செய்யக்கோரி நகராட்சி தேர்தலை புறக்கணிக்க போவதாக பொதுமக்கள் அறிவிப்பு அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை


களக்காடு கீழப்பத்தை வார்டு மறுவரையறையை மறுபரிசீலனை செய்யக்கோரி நகராட்சி தேர்தலை புறக்கணிக்க போவதாக பொதுமக்கள் அறிவிப்பு அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 25 Jan 2022 9:14 PM GMT (Updated: 2022-01-26T02:44:26+05:30)

நகராட்சி தேர்தலை புறக்கணிக்கப்போவதாக பொதுமக்கள் அறிவித்ததை தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்

களக்காடு:
களக்காடு கீழப்பத்தை வார்டு மறுவரையறையை மறுபரிசீலனை செய்யக்கோரி நகராட்சி தேர்தலை புறக்கணிக்கப்போவதாக பொதுமக்கள் அறிவித்ததை தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
வார்டு மறுவரையறை
நெல்லை மாவட்டம் களக்காடு நகராட்சிக்கு உட்பட்ட கீழப்பத்தையை சேர்ந்த பொதுமக்கள் கீழப்பத்தையில் வார்டு பிரிக்கப்பட்டதில் குளறுபடி நிலவுவதாக புகார் தெரிவித்தனர். மேலும் கீழப்பத்தை வார்டு மறுவரையறையை மறு பரிசீலனை செய்யக்கோரி நகராட்சி தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்து உள்ளனர்.
இதனைத்தொடர்ந்து களக்காடு நகராட்சி ஆணையாளர் ரமேஷ் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சுகாதார ஆய்வாளர் ஆறுமுகநயினார், மேற்பார்வையாளர் சண்முகம், நகர தி.மு.க. செயலாளர் மணிசூரியன், துணை செயலாளர் அழகிரிராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
உடன்பாடு ஏற்படவில்லை
அப்போது அதிகாரிகள், 3 முறை கருத்து தெரிவிக்க வாய்ப்பு அளிக்கப்பட்ட பின்னரே வார்டுகள் பிரிக்கப்பட்டன. இருப்பினும் உங்கள் கோரிக்கையை மாவட்ட நிர்வாகத்துக்கும், தேர்தல் அதிகாரிக்கும் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர்.
ஆனால் பொதுமக்கள் கீழப்பத்தை வார்டு பிரிக்கப்பட்டதை மறு பரிசீலனை செய்தால் மட்டுமே தேர்தல் புறக்கணிப்பை வாபஸ் பெறுவோம், என்று கூறினர். இதனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
......

Next Story