குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது


குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
x
தினத்தந்தி 26 Jan 2022 4:10 PM GMT (Updated: 26 Jan 2022 4:10 PM GMT)

தேவதானப்பட்டியில் குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தேவதானப்பட்டி:
தேவதானப்பட்டி தெற்குத்தெருவை சேர்ந்தவர் தங்கப்பாண்டி (வயது 29). இவர் கடந்த மாதம் வழிப்பறி, கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டு, பெரியகுளம் சிறையில் அடைக்கப்பட்டார். 
மேலும் தங்கப்பாண்டி மீது கஞ்சா விற்றது, கொலை முயற்சி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதையடுத்து அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்ரே, கலெக்டர் முரளிதரனுக்கு பரிந்துரை செய்தார். 
அவரது உத்தரவின்பேரில் தங்கப்பாண்டியை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். 

Next Story