கார் மோதி மூதாட்டி பலி


கார் மோதி மூதாட்டி பலி
x
தினத்தந்தி 26 Jan 2022 4:34 PM GMT (Updated: 2022-01-26T22:04:07+05:30)

கார் மோதி மூதாட்டி பலி

தாராபுரம்:
தாராபுரத்தை அடுத்த ஆச்சியூர் ராம் நகரை சேர்ந்தவர் பழனிசாமி மனைவி வெள்ளையம்மாள் (வயது 69). இவர் நேற்று காலை 8 மணிக்கு வீட்டிலிருந்து தோட்டத்துக்கு செல்ல தாராபுரம் ஒட்டன்சத்திரம் சாலையை கடக்க முயன்றார். அப்போது கோவையில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் தேனி மாவட்டம் போடிநாயக்கனூரை சேர்ந்த சுரேஷ்குமார் (40), தனது குடும்பத்துடன் காரில் கோவையில் இருந்து புறப்பட்டு தாராபுரம் வழியாக ஒட்டன்சத்திரம் சாலையில் சென்று கொண்டிருந்தார். சாலையை வெள்ளையம்மாள் கடக்க முயன்ற போது சுரேஷ்குமார் கார் கட்டுப்பாட்டை இழந்து அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே வெள்ளையம்மாள் இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அன்புச்செல்வி வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த சுரேஷ்குமாரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story