இந்து அன்னையர் முன்னணியினர் போராட்டம்


இந்து அன்னையர் முன்னணியினர் போராட்டம்
x
தினத்தந்தி 26 Jan 2022 4:41 PM GMT (Updated: 26 Jan 2022 4:41 PM GMT)

இந்து அன்னையர் முன்னணியினர் போராட்டம்

குண்டடம்:
அரியலூர் அருகே தற்கொலை செய்து கொண்ட மாணவியின் குடும்பத்திற்கு நியாயம் கிடைக்கவும், தற்கொலைக்கு காரணமான பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி குண்டடத்தில் இந்து அன்னையர் முன்னணி சார்பில் விளக்கேற்றும் போராட்டம் நடைபெற்றது. 
குண்டடம் பஸ் நிறுத்தம் அருகே நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு இந்து அன்னையர் முன்னணி திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் நளினி தலைமை தாங்கினார். இதில் இந்து முன்னணி மாநில இணை அமைப்பாளர் ராஜேஷ் கலந்து கொண்டு போராட்டத்தை விளக்கி பேசினார். நிகழ்ச்சியில் இந்து முன்னணி கோட்ட செயலாளர் கோவிந்தராஜ், மாவட்ட செயலாளர் தியாகராஜன் மற்றும் அன்னையர் முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டு தற்கொலை செய்து கொண்ட மாணவி குடும்பத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டி விளக்கேற்றினர். 
நிகழ்ச்சியில் குண்டடம், கொடுவாய் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story