காரைக்காலில் சீல் வைக்கப்பட்ட மதுக்கடையில் திருடிய சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது


காரைக்காலில் சீல் வைக்கப்பட்ட மதுக்கடையில் திருடிய சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 26 Jan 2022 4:50 PM GMT (Updated: 26 Jan 2022 4:50 PM GMT)

காரைக்கால் அருகே சீல் வைக்கப்பட்ட மதுக்கடையில் திருடிய சிறுவர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

காரைக்கால், ஜன.
காரைக்கால் அருகே சீல் வைக்கப்பட்ட மதுக்கடையில் திருடிய சிறுவர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
மதுக்கடை
காரைக்காலை அடுத்த திரு-பட்டினத்தை சேர்ந்தவர் மறைந்த தொழில் அதிபர் ராமு. இவரது குடும்பத்துக்கு சொந்தமான மதுக்கடை மேலவாஞ்சூர்   பகுதியில் உள்ளது.  இந்த கடைக்கு ராமுவின் முதல் மனைவி வினோதாவின் மகன் அஜேஸ்ராமுவும், 2-வது மனைவி எழிலரசியும் சொந்தம் கொண்டாடியதால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டது. 
இதனால் போலீஸ் பரிந்துரையின்படி மாவட்ட வருவாய்த்துறையினர் அந்த மதுக்கடையை பூட்டி சீல் வைத்தனர். சம்பவத்தன்று மதுக்கடையின் முன்பக்க ஷெட்டரை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், ரூ.10 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்களை அள்ளிச் சென்றனர்.
3 பேர் கைது
இதுகுறித்து அறிந்த அஜேஸ்ராமு, திரு-பட்டினம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். நேற்று முன்தினம் மதுக்கடை அருகே சந்தேகத்துக்கிடமாக சுற்றித்திரிந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர், நாகை மாவட்டம் பனங்குடி சன்னங்களம் பகுதியை சேர்ந்த  அஜித்குமார் (வயது 23) என்பதும், அந்த மதுக்கடையில் மதுபாட்டில்களை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் திருட்டுக்கு உடந்தையாக இருந்த 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர். 
இதில் தொடர்புடைய சுபாஷ் (22), சிவக்குமார் (23) ஆகிய 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். கைதான அஜித்குமாரிடம் இருந்து ரூ.8 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story