தமிழக அலங்கார ஊர்தி புறக்கணிப்பு திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்


தமிழக அலங்கார ஊர்தி புறக்கணிப்பு  திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 Jan 2022 5:20 PM GMT (Updated: 26 Jan 2022 5:20 PM GMT)

திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை:-

குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அலங்கார ஊர்தி புறக்கணிக்கப்பட்டதாக கூறி மத்திய அரசை கண்டித்து திராவிடர் கழகத்தின் சார்பில் மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தளபதிராஜ் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட அமைப்பாளர் ஞான.வள்ளுவன், மாவட்ட துணை செயலாளர் அரங்க.நாகரத்தினம், நகர தலைவர் சீனி.முத்து, செயலாளர் அருள்தாஸ், ஒன்றிய தலைவர் இளங்கோவன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இதேபோல குத்தாலம் அருகே கொக்கூர் கிராமத்தில் ஒன்றிய தலைவர் முருகையன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 

Next Story