மயிலாடுதுறை மாவட்ட பகுதிகளில் குடியரசு தின விழா


மயிலாடுதுறை மாவட்ட பகுதிகளில் குடியரசு தின விழா
x
தினத்தந்தி 26 Jan 2022 5:30 PM GMT (Updated: 26 Jan 2022 5:30 PM GMT)

மயிலாடுதுறை மாவட்ட பகுதிகளில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

மயிலாடுதுறை:-

மயிலாடுதுறை மாவட்ட பகுதிகளில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. 

ஒன்றிய அலுவலகம்

மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் குடியரசு தினவிழா நடந்தது. விழாவிற்கு ஒன்றியக்குழு தலைவி காமாட்சிமூர்த்தி தலைமை தாங்கி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். ஒன்றிய ஆணையர் அன்பரசன் முன்னிலை வகித்தார். ஒன்றிய மேலாளர் பன்னீர்செல்வம் வரவேற்று பேசினார். இதில் ஒன்றியக்குழு துணைத் தலைவி மகேஸ்வரிமுருகவேல், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சுரேஷ், ஒன்றிய குழு உறுப்பினர்கள் காந்தி, மோகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதேபோல மயிலாடுதுறை பொதுப்பணித்துறை காவிரி வடிநில கோட்ட அலுவலகத்தில் நடந்த குடியரசு தின விழாவில் செயற்பொறியாளர் சண்முகம் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் நடந்த குடியரசு தின விழாவிற்கு ஆணையர் பாலு தலைமை தாங்கினார். இதில் ராஜகுமார் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். மயிலாடுதுறை ஞானாம்பிகை அரசு மகளிர் கல்லூரியில் முதல்வர் அறவாழி தலைமையிலும் இயற்பியல் துறை தலைவர் துரை. பென்னிஅன்புராஜ் முன்னிலையிலும் நடந்த விழாவில் கணினி அறிவியல் துறை தலைவர் மங்கையர்கரசி தேசியக்கொடி ஏற்றி வைத்தார்.

சீர்காழி

சீர்காழி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன் தேசியக்கொடி ஏற்றினார். துணைத்தலைவர் உஷா நந்தினி பிரபாகரன், ஒன்றிய ஆணையர்கள் இளங்கோவன், அருள்மொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார் வரவேற்று பேசினார். இதில் தி.மு.க. ஒன்றிய பொறுப்பாளர் பிரபாகரன், மாவட்ட கவுன்சிலர் விஜயேஸ்வரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மேலாளர் சுமதி நன்றி கூறினார். இதேபோல் சீர்காழி நகராட்சி வளாகத்தில் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) இப்ராஹிம் தேசியக்கொடியை ஏற்றினார். நிகழ்ச்சியில் மேலாளர் காதர்கான், பணி மேற்பார்வையாளர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
இதேபோல் சீர்காழி தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் சண்முகம் தலைமையில் குடியரசு தின விழா நடைபெற்றது. சீர்காழி ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் குடியரசு தின விழா நடைபெற்றது. விழாவிற்கு வக்கீல் சங்க தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். செயலாளர் நெடுஞ்செழியன் முன்னிலை வகித்தார். விழாவில் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி அலெக்ஸ்ராஜ் தேசியக்கொடி ஏற்றினார். 
இதேபோல் மாவட்டம் முழுவதும் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

Next Story