182 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம்


182 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம்
x
தினத்தந்தி 26 Jan 2022 5:35 PM GMT (Updated: 26 Jan 2022 5:41 PM GMT)

ரெட்டியார்சத்திரத்தில் 182 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கத்தை அமைச்சர் இ.பெரியசாமி வழங்கினார்.

திண்டுக்கல் :

ரெட்டியார்சத்திரத்தில் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் விசாகன் தலைமை தாங்கினார். விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி கலந்துகொண்டு 182 பயனாளிகளுக்கு தலா 8 கிராம் தாலிக்கு தங்கமும், திருமண நிதி உதவியும் வழங்கி பேசினார். அப்போது அவர் பேசுகையில், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி தான் முதன் முதலில் திருமண நிதி உதவி திட்டத்தை செயல்படுத்தினார். இந்த திட்டத்தால் தமிழகம் முழுவதும் ஏழை எளிய மக்கள் பயன் அடைந்து வருகின்றனர் என்றார். 

விழாவில் ரெட்டியார்சத்திரம் ஒன்றியக்குழு தலைவர் சிவகுருசாமி, தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர் தண்டபாணி, ரெட்டியார்சத்திரம் ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் சத்தியமூர்த்தி, கொத்தமல்லி ஊராட்சி மன்ற தலைவர் அன்பரசு சுந்தரி, துணை தலைவர் ரங்கசாமி, கசவனம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சக்தி, கன்னிவாடி நகர செயலாளர் சண்முகம், கூட்டாத்துப்பட்டி ஊராட்சி தலைவர் வேல்கனி, கரிசல்பட்டி ஊராட்சி தலைவர் பால்ராஜ், ஒன்றிய கவுன்சிலர்கள், திருப்பதி, சுரேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story
  • chat