கலெக்டர் சமீரன் தேசிய கொடியை ஏற்றினார்


கலெக்டர் சமீரன் தேசிய கொடியை ஏற்றினார்
x
தினத்தந்தி 26 Jan 2022 6:07 PM GMT (Updated: 26 Jan 2022 6:07 PM GMT)

கோவையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் கலெக்டர் சமீரன் தேசிய கொடியை ஏற்றியதுடன் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய 305 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

கோவை

கோவையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில்  கலெக்டர் சமீரன் தேசிய கொடியை ஏற்றியதுடன் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய 305 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

குடியரசு தின விழா

நாடு முழுவதும் 73-வது குடியரசு தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. கோவை வ.உ.சி. மைதானத்தில் நடந்த விழாவில் மாவட்ட கலெக்டர் சமீரன் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். 

இதைத்தொடர்ந்து போலீசாரின் கண்கவர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதையடுத்து மூவர்ண பலூன் மற்றும் சமாதானத்துக்கு அடையாளமாக புறாவைவும் கலெக்டர் பறக்க விட்டார்.

305 பேருக்கு சான்றிதழ்

இதைத்தொடர்ந்து கோவை மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 111 போலீசாருக்கு முதல் அமைச்சரின் பதக்கங் களை கலெக்டர் அணிவித்து பாராட்டினார். மேலும் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய முன்கள பணியாளர்களுக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்.

இதன்படி கோவை அரசு ஆஸ்பத்திரி டீன் நிர்மலா, இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி டீன் ரவீந்திரன், மாவட்ட சுகாதார துணை இயக்குனர் அருணா, சுகாதாரத்துறை ஊரக இணை இயக்குனர் சந்திரா உள்பட நர்சுகள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது. மொத்தத்தில் வருவாய் உள்பட 22 துறைகளை சேர்ந்த 305 பேருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

கலைநிகழ்ச்சிகள் ரத்து

இந்த நிகழ்ச்சியில் மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர், போலீஸ் கமிஷனர் பிரதீப்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வ நாகரத்தினம், மாவட்ட வருவாய் அதிகாரி லீலா அலெக்ஸ், போலீஸ் துணை கமிஷனர்கள் உமா, ஜெயச்சந்திரன், செல்வராஜ் மற்றும் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சாந்திமதி தோப்பு அசோகன் உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெறவில்லை. குடியரசு தின விழாவைக் காண பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படாததால் மாவட்ட கலெக்டரின் முகநூல் பக்கத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. குடியரசு தினவிழாவையொட்டி மைதானம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

பொன்னாடை அணிவிப்பு

வழக்கமாக குடியரசு தினவிழாவின்போது சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசதாரர்கள் விழா மேடைக்கு அழைக்கப்பட்டு கவுரவிக்கப்படுவார்கள். தற்போது கொரோனா பரவலை கருத்தில் கொண்டு அவர்களின் வீடுகளுக்கே சென்று தாசில்தார் மற்றும் துணை தாசில்தார்கள் பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தனார்கள். 


Next Story