‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 26 Jan 2022 7:32 PM GMT (Updated: 26 Jan 2022 7:32 PM GMT)

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

குடிநீர் குழாயில் உடைப்பு
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சாலையில் அன்னவாசல் பள்ளூரணி அருகே காவிரி குடிநீர் குழாயில் வெடிப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் அந்த இடம் குளம்போல் காட்சி அளிக்கிறது. இதுபோன்று அதே இடத்தில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குழாய் உடைப்பை சரி செய்ய வேண்டும்.
திவ்யா, புதுக்கோட்டை.
இடித்த கட்டிடம் அகற்றப்படுமா?
திருச்சி மாவட்டம் உப்பிலியபுரத்தை அடுத்துள்ள நெட்டவேலம்பட்டி உயர்நிலைப்பள்ளியில் 3 கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. ஆனால்  மண்குவியல்கள், கம்பிகள் அப்படியே இருப்பதால், பள்ளி திறக்கப்படும் காலங்களில் மாணவர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. எனவே பள்ளி திறக்கும் முன் மண் குவியல்களை அகற்றி, சமன்படுத்தி தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
லீலா, உப்பிலியபுரம், திருச்சி.
தெருநாய்கள் தொல்லை அதிகரிப்பு
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா ஒகளூர் கிராமத்தில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், இருசக்கர வாகனங்களில் செல்வோரை துரத்தி சென்று கடிக்க வருகிறது. இதனால் சிறுவர்கள் மற்றும் முதியோர்கள் அச்சம் அடைந்து வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விக்னேஷ், பெரம்பலூர்.
திருச்சி மாவட்டம் முசிறி தொகுதிகுட்பட்ட கொளக்குடி, அப்பணநல்லூர் பஞ்சாயத்தில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சாலையில் செல்லும் சிறுவர்கள் மற்றும் முதியோர்களை அச்சுறுத்தி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அப்துல்லா, திருச்சி.
மின்கம்பத்தை மாற்ற கோரிக்கை
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம்- நொய்யல் செல்லும் நெடுஞ்சாலையில் புங்கோடை அருகே தார் சாலையின் ஓரத்தில் இரும்பு மின்கம்பம் உள்ளது. இந்தநிலையில் இந்த மின்கம்பம் தற்போது வளைந்த நிலையில் உள்ளது. மேலும், எந்த நேரத்திலும் தார் சாலையோரத்தில் விழும் நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் இந்த மின் கம்பத்தை மாற்றி விபத்தை தடுக்க வேண்டும்.
கிருபா, கரூர்.
திருச்சி மாவட்டம் முசிறி நகராட்சி குப்பைக் கிடங்கு அருகில் அரசு அண்ணா கலைக்கல்லூரி செல்லும் சாலையில் போக்குவரத்து இடையூறாக சாலையின் நடுவில் உள்ள மின்கம்பத்தை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிருஷ்ணா, திருச்சி.
திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் கீழ கல்பாளையம் பகுதியில் உள்ள மின்கம்பம் மிகவும் பழுதடைந்து உள்ளது. இதனால் பலத்த காற்று வீசினால் இந்த மின்கம்பம் உடைந்து விழும் நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த மின்கம்பத்தை மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், திருச்சி.

Next Story