பணகுடி:3 கோவில்களில் துணிகர திருட்டு


பணகுடி:3 கோவில்களில் துணிகர திருட்டு
x
தினத்தந்தி 26 Jan 2022 9:09 PM GMT (Updated: 26 Jan 2022 9:09 PM GMT)

3 கோவில்களில் துணிகர திருட்டு

பணகுடி :
பணகுடி அருகேயுள்ள வடலிவிளையில் பத்திரகாளிஅம்மன் கோவில் உள்ளது. நேற்று காலையில் பூஜை செய்ய பூசாரி விஜயராஜ் சென்றுள்ளார். அப்போது கதவு பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்து ஊர்த்தலைவர் முத்துகிருஷ்ணனுக்கு தகவல் கொடுத்துள்ளார். இதுகுறித்து பணகுடி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். கோவிலில், மர்மநபர்கள் அம்மன் கழுத்தில் கிடந்த தாலி, காதில் அணிந்திருந்த கம்மல் ஆகியவற்றை திருடிச்சென்று உள்ளனர். கோவில் முன்பு வைத்திருந்த உண்டியலையும் தூக்கிச்சென்று ஊருக்கு ஒதுக்குப்புறமுள்ள பகுதியில் வைத்து உடைத்து காணிக்கை பணத்தையும் திருடிச்சென்றனர்.
இதேபோன்று அருகிலுள்ள சுப்பிரமணியபுரம் மற்றும் கலந்தபனை அம்மன் கோவில்களிலும் மர்மநபர்கள் புகுந்து அம்மன் கழுத்தில் அணிந்திருந்த தாலியை திருடி சென்றுள்ளனர். ஒரே நாளில் அடுத்தடுத்த 3 ஊர்களில் குடியிருப்புக்கு மத்தியில் உள்ள கோவில்களில் திருடர்கள் கைவரிசை காட்டி உள்ளனர். கலந்தபனையில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இதன்மூலம் போலீசார் விசாரணை நடத்தி திருடர்களை தேடி வருகிறார்கள்.

Next Story