மந்திரி சசிகலா ஜோலேவுக்கு மீண்டும் கொரோனா


மந்திரி சசிகலா ஜோலேவுக்கு மீண்டும் கொரோனா
x
தினத்தந்தி 26 Jan 2022 9:42 PM GMT (Updated: 26 Jan 2022 9:42 PM GMT)

மந்திரி சசிகலா ஜோலே கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார்.

பெங்களூரு: கர்நாடக அறநிலையத்துறை மந்திரியாக பணியாற்றி வருபவர் சசிகலா ஜோலே. இவர் கடந்த 2 நாட்களாக சளி, காய்ச்சலால் அவதிப்பட்டார். அவருக்கு கொரோனா அறிகுறியும் தென்பட்டது. இதனால் அவர் கொரோனா பரிசோதனை செய்து இருந்தார். இதில் சசிகலா ஜோலேவுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. 

இதையடுத்து டாக்டரின் அறிவுரையின்பேரில் சசிகலா ஜோலே வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்யும்படி அவர் வேண்டுகோள் விடுத்து உள்ளார். கொரோனா 2-வது அலையின் போதும் சசிகலா ஜோலே கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தார். தற்போது அவருக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் கவுரவ் குப்தாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Next Story