வாய்க்காலில் அழுகிய நிலையில் ஆண் பிணம்


வாய்க்காலில் அழுகிய நிலையில் ஆண் பிணம்
x
தினத்தந்தி 27 Jan 2022 4:25 PM GMT (Updated: 2022-01-27T21:55:54+05:30)

வாய்க்காலில் அழுகிய நிலையில் ஆண் பிணம் கிடந்தது.

நாகப்பட்டினம்:
நாகை பாப்பாக்கோவில் அருகே ஏறுஞ்சாலை, வாய்க்காலில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து நாகை டவுன் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? பிணமாக கிடந்தவர் நிர்வாணமாக கிடந்ததால் அவரை யாராவது கொலை செய்து வாய்க்காலில் வீசி சென்றார்களா? அல்லது வாய்க்காலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தவறி விழுந்து உயிரிழந்தாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story