கோவை மாநகராட்சி 100 வார்டுகளுக்கு 20 இடங்களில் வேட்புமனு தாக்கல் செய்ய ஏற்பாடு


கோவை மாநகராட்சி 100 வார்டுகளுக்கு 20 இடங்களில் வேட்புமனு தாக்கல் செய்ய ஏற்பாடு
x
தினத்தந்தி 27 Jan 2022 5:18 PM GMT (Updated: 27 Jan 2022 5:18 PM GMT)

கோவை மாநகராட்சியில் 100 வார்டுகளுக்கு 20 இடங்களில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக தேர்தல் நடத்தும் உதவி அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

கோவை

கோவை மாநகராட்சியில் 100 வார்டுகளுக்கு 20 இடங்களில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக தேர்தல் நடத்தும் உதவி அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய பிப்ரவரி 4-ந் தேதி கடைசி நாளாகும். 

5-ந் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது. 7-ந் தேதி வேட்பு மனுக்கள் வாபஸ் வாங்க கடைசி நாளாகும். அதன்படி கோவை மாவட்டத்தில் கோவை மாநகராட்சி, பொள் ளாச்சி, வால்பாறை, மேட்டுப்பாளையம், கருமத்தம்பட்டி, மதுக்கரை, க.கூடலூர், காரமடை ஆகிய 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகளில் மொத்தம் 831 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

20 இடங்களில் வேட்புமனுக்கள் தாக்கல்

இதில் கோவை மாநகராட்சியில் 100 வார்டுகளுக்கு தேர்தல் நடக்கிறது. இதற்காக 20 இடங்களில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 20 உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். 5 வார்டுகளுக்கு ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

அதன்படி 13, 18, 19, 29, 30 ஆகிய 5 வார்டுகளுக்கு வடக்கு மண்டலத்தில் உதவி ஆணையாளர் மோகன சுந்தரியிடமும், 1, 2, 3,14,15 ஆகிய வார்டுகளுக்கு வடக்கு மண்டல அலுவலகத்தில் நிர்வாக அலுவலர் ராஜ மாணிக்கம், 4,10,11,12, 21 ஆகிய வார்டுகளுக்கு வடக்கு மண்டல அலுவலகத்தில் உதவி செயற் பொறியாளர் உமாதேவி, 20, 25, 26, 27, 28 ஆகிய வார்டுகளுக்கு வடக்கு மண்டல அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளர் செந்தில் பாஸ்கர் ஆகியோரிடம் மனு தாக்கல் செய்யலாம்.

5, 6, 8, 9, 22 ஆகிய வார்டுகளுக்கு கிழக்கு மண்டல அலுவலகத்தில் குடிநீர் வினியோக கணக்கு பிரிவு அலுவலர் தமிழ்வேந்தன், 55,56,57,58,61 ஆகிய வார்டுகளுக்கு கிழக்கு மண்டல அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளர் (ஜே.என்.என்.யூ.ஆர்.எம். பிரிவு) ஜான்சன் 7, 23, 24, 54, 59 ஆகிய வார்டுகளுக்கு கிழக்கு மண்டல அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளர் (திட்டம்) விமலா, 50, 51, 52, 53, 60 ஆகிய வார்டுகளுக்கு கிழக்கு மண்டல அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளர் புவனேஸ்வரி ஆகியோரிடம் மனு தாக்கல் செய்யலாம்.

தெற்கு மண்டல அலுவலகம்

87, 88, 89, 90, 91 வார்டுகளுக்கு தெற்கு மண்டல அலுவலகத்தில் உதவி ஆணையாளர் அண்ணாதுரை, 92, 93, 94, 95, 97 ஆகிய வார்டுகளுக்கு தெற்கு மண்டல அலுவலகத்தில் நிர்வாக அலுவலர் மாணிக்கம், 76, 77, 78, 79, 86 ஆகிய வார்டுகளுக்கு தெற்கு மண்டல அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளர் (திட்டம்) ஜெயலட்சுமி, 85, 96, 98, 99, 100 ஆகிய வார்டுகளுக்கு தெற்கு மண்டல அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளர் கருப்புசாமி ஆகியோரிடம் மனுதாக்கல் செய்யலாம்.

71, 72, 73, 74, 75 ஆகிய வார்டுகளுக்கு மேற்கு மண்டல அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளர் ஹேமலதா, 36, 42, 43, 44, 45 ஆகிய வார்டுகளுக்கு மேற்கு மண்டல அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளர் (ஜே.என்.என்.யூ.ஆர்.எம். பிரிவு) சுகந்தி 37, 38, 39, 40, 41 ஆகிய வார்டுகளுக்கு மேற்கு மண்டல அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளர் (ஜே.என்.என்.யூ.ஆர்.எம். பிரிவு) பாலமுருகன், 16,17, 33, 34, 35 ஆகிய வார்டுகளுக்கு மேற்கு மண்டல அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளர் (திட்டம்) கலாவதி ஆகியோரிடம் மனுதாக்கல் செய்யலாம்.

62, 63, 64, 65, 84 ஆகிய வார்டுகளுக்கு மத்திய மண்டல அலுவலகத்தில் உதவி ஆணையாளர் சுந்தர்ராஜன், 48,49,67,68,70 ஆகிய வார்டுகளுக்கு மத்திய மண்டல அலுவலகத்தில் நிர்வாக அலுவலர் கணேஷ் குமார், 31,32,46,47,69 ஆகிய வார்டுகளுக்கு டாடாபாத்தில் உள்ளூர் திட்டக்குழுமம் எதிரில் உள்ள உள்ள மாநகராட்சி பொறியாளர் பிரிவு அலுவலகத்தில் செயற்பொறியாளர் (திட்டம்) கருப்பாத்தாள், 66,80,81,82,83 ஆகிய வார்டுகளுக்கு மத்திய மண்டலத்தில் உள்ள வார்டு குழு தலைவர் அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளர் (ஜே.என்.என்.யூ.ஆர்.எம். பிரிவு) ராமசாமி ஆகியோரிடம் மனுதாக்கல் செய்யலாம்.


Next Story