சங்கராபுரம் அருகே 250 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு


சங்கராபுரம் அருகே 250 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
x
தினத்தந்தி 27 Jan 2022 5:18 PM GMT (Updated: 2022-01-27T22:48:23+05:30)

சங்கராபுரம் அருகே 250 லிட்டர் சாராய ஊறலை போலீசாா் அழித்தனா்.

சங்கராபுரம்,

சங்கராபுரம் அருகே உள்ள விரியூர் கிராமத்தில் சாராயம் காய்ச்சப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமால் மற்றும் போலீசார் விரியூர் கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள வயல்வெளி பகுதியில் சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்த ஒருவர், போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடிவிட்டார். 
 
இதையடுத்து போலீசார் அங்கு சென்று சாராயம் காய்ச்சுவதற்காக வைக்கப்பட்டிருந்த 250 லிட்டர் சாராய ஊறலை பறிமுதல் செய்து கீழே கொட்டி அழித்தனர். மேலும் இதுதொடர்பாக விரியூர் கிராமத்தைச் சேர்ந்த பிரான்சிஸ் மகன் சவரிராஜ் (வயது 55) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story