திப்பு சுல்தான் பெயருக்கு பா.ஜனதா எதிர்ப்பு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கண்டனம்


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 27 Jan 2022 6:11 PM GMT (Updated: 27 Jan 2022 6:11 PM GMT)

பூங்காவுக்கு திப்பு சுல்தான் பெயர் வைக்க பா.ஜனதா எதிர்ப்பு தெரிவித்தற்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கண்டனம் தெரிவித்து உள்ளன.

மும்பை,
பூங்காவுக்கு திப்பு சுல்தான் பெயர் வைக்க பா.ஜனதா எதிர்ப்பு தெரிவித்தற்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கண்டனம் தெரிவித்து உள்ளன.
பா.ஜனதா எதிர்ப்பு
மும்பை மால்வாணி பகுதியில் புதுப்பிக்கப்பட்ட பூங்காவுக்கு திப்பு சுல்தான் பெயர் சூட்டப்பட்டது. இதற்கு பா.ஜனதா எதிர்ப்பு தெரிவித்தது, மேலும் பெயர் சூட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்திலும் ஈடுபட்டனர். திப்பு சுல்தான் இந்துக்களை துன்புறுத்தியதாக குற்றம் சாட்டிய அவர்கள், அவரின் பெயரை பூங்காவுக்கு சூட்டக்கூடாது என்றனர்.
இந்தநிலையில் இந்த விவகாரத்தில் பா.ஜனதாவுக்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், எம்.ஐ.எம். கட்சிகள் கண்டனம் தெரிவித்து உள்ளன. 
மலிவான அரசியல்
இது குறித்து காங்கிரஸ் மந்திரி அஸ்லாம் சேக் கூறுகையில், "15 ஆண்டுகளாக திப்பு சுல்தான் பூங்கா என தான் அழைக்கப்பட்டு வந்தது. புதிதாக எதையும் செய்யவில்லை " என்றார்.
காங்கிரஸ் செய்தி பொதுச்செயலாளர் சச்சின் சாவந்த் கூறுகையில், "ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த 2017-ல் கர்நாடக சட்டசபையில் பேசும் போது, திப்புசுல்தான் பற்றி பேசினார். பா.ஜனதா அதை மறந்துவிட்டதா?. வரலாற்று சிறப்பு மிக்கவர்களை மதத்தின் கீழ் கொண்டு வருவதும், வெறுப்பை கக்குவதும் பா.ஜனதாவின் மலிவான அரசியல்" என்றார்.
தேசியவாத காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக் கூறும்போது:- 
அரசியல் நாடகம்
திப்பு சுல்தான் ஒருபோதும் ஆங்கிலேயர்களிடம் சரணடையவில்லை. அவர் போர் களத்தில் வீர மரணம் அடைந்தார். பா.ஜனதா அவர் போன்ற போராளியை எதிர்க்கிறது. கர்நாடகாவில் பா.ஜனதாவை சேர்ந்த எடியூரப்பா ஆண்டு தோறும் திப்பு சுல்தான் நினைவு நாளை கொண்டாடினார். முதல்-மந்திரி ஆன பிறகு அதை நிறுத்தினார். மும்பையிலும் பூங்காவுக்கு திப்பு சுல்தான் பெயர் வைக்க பா.ஜனதா கவுன்சிலர்கள் கடிதம் கொடுத்து உள்ளனர். இது மக்களை திசை திருப்ப பா.ஜனதா நடத்தும் யுக்தியை தவிர வேறு ஒன்றுமில்லை. 
இவ்வாறு அவர் கூறினார். 
எம்.ஐ.எம். எம்.பி. இம்தியாஸ் ஜலில், திப்பு சுல்தான் முஸ்லிம் என்பதால் அவரது பெயருக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

Next Story