குடியரசு தின விழா கொண்டாட்டம்


குடியரசு தின விழா கொண்டாட்டம்
x
தினத்தந்தி 27 Jan 2022 6:32 PM GMT (Updated: 27 Jan 2022 6:32 PM GMT)

சீர்காழி, கொள்ளிடம் பகுதியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

கொள்ளிடம்:
சீர்காழி, கொள்ளிடம் பகுதியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. 
கொள்ளிடம் ஒன்றிய அலுவலகம்
கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ் தலைமை தாங்கி தேசியக்கொடியை ஏற்றினார். விழாவில் துணைத்தலைவர் பானு சேகர், ஒன்றிய ஆணையர் ரெஜினாராணி, வட்டார வளர்ச்சி அலுவலர் உமாசங்கர், ஒன்றிய மேலாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 
இதேபோல் கொள்ளிடம் பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் உதவி பொறியாளர் விவேகானந்தன் தேசியக்கொடி ஏற்றினார். கொள்ளிடம், புதுப்பட்டினம் ஆகிய இடங்களில் உள்ள போலீஸ் நிலையங்கள் மற்றும் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகங்களிலும் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. கொள்ளிடம் அருகே உள்ள மயில்கோவில் கிராமத்தில் உள்ள காந்தி சிலைக்கு ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ், ஊராட்சி மன்ற தலைவர்கள் நாகராஜன், இளவரசன், தி.மு.க. ஒன்றிய அவைத்தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 
சீர்காழி
சீர்காழி உதவி கலெக்டர் அலுவலகத்தில் உதவி கலெக்டர் நாராயணன் தேசியக்கொடி ஏற்றினார். நேர்முக உதவியாளர் முருகானந்தம், சீர்காழி தாசில்தார் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய் ஆய்வாளர் பொன்னிவளவன் வரவேற்று பேசினார்.
 முன்னதாக தரங்கம்பாடி தாலுகா இலுப்பூர் கிராமத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகி முத்தையா இல்லத்திற்கு சென்று உதவி கலெக்டர் சால்வை அணிவித்து கவுரவித்தார். 

Next Story