தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 27 Jan 2022 7:54 PM GMT (Updated: 27 Jan 2022 7:54 PM GMT)

தஞ்சை மாவட்டத்தில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.

 நாய்கள் தொல்லை
 பட்டுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பழைய வீட்டு வசதி வாரியம் மற்றும் லட்சத்தோப்பு பகுதிகளில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைகின்றனர். சாலையில் நடந்து செல்லும் சிறுவர் சிறுமிகளை விரட்டிச்சென்று நாய்கள் கடித்து விடுகின்றன. மேலும் சாலையின் குறுக்கே செல்லும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தெருவில் சுற்றித் திரியும் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
-பூசைக்கண்ணு, லெட்சத்தோப்பு.
 சாலை சீரமைக்கப்படுமா?
 தஞ்சையை அடுத்த பள்ளி அக்ரஹாரத்தில் ரவுண்டானா உள்ளது. இந்த வழியாக தான் கும்பகோணம் செல்லவேண்டும். இந்த ரவுண்டானாவை சுற்றியுள்ள சாலை மிகவும் பழுதடைந்து உள்ளது. கனரகவாகனம் செல்லும் போது சாலையில் புழுதி கிளம்புகின்றன. இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லுபவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ரவுண்டானாவை சுற்றி உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-பொதுமக்கள், பள்ளி அக்ரஹாரம்.
சேதமடைந்த மின்மாற்றி 
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா கீழப்பட்டகாரத்தெருவில் உள்ள மின்மாற்றியில் இரண்டு பக்க தூண்களும் மிகவும் பழுதடைந்து சிமெண்டு  காரைகள் பெயர்ந்து விழுந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் இந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். அருகில் குடியிருப்புகளும் உள்ளன எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பேராபத்து ஏற்படும் முன்பு புதிய மின்கம்பங்கள் அமைத்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். .
-சூர்யபிரகாஷ், திருவிடைமருதூர்.


Next Story