லாரி மோதி தொழிலாளி பலி


லாரி மோதி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 27 Jan 2022 7:59 PM GMT (Updated: 27 Jan 2022 7:59 PM GMT)

ஆத்தூரில் மனைவி, மகன் கண்முன்னே லாரி மோதி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆத்தூர்:-
ஆத்தூரில் மனைவி, மகன் கண்முன்னே லாரி மோதி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
தொழிலாளி
ஆத்தூர் அருகே உள்ள கல்லாநத்தம் கிராமம் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் ராமநாதன் (வயது 65). தொழிலாளி. இவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நலம் சரியில்லை. இதனால் ராமநாதனை ஒரு மொபட்டில் அவரது மனைவி கருப்பாயி, மகன் கம்பன் (33) ஆகியோர் ஆத்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்தனர்.
பின்னர் சிகிச்சை முடிந்து நேற்று மதியம் சொந்த ஊருக்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தனர். மொபட்டை கம்பன் ஓட்டினார். பின்னால் ராமநாதன், கருப்பாயி ஆகியோர் அமர்ந்திருந்தனர்.
பலி
ஆத்தூர் முல்லைவாடி என்ற இடத்தில் சென்றபோது பின்னால் சேகோ கழிவுகளை ஏற்றி வந்த லாரி எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது. இதில் 3 பேரும் கீழே விழுந்தனர். அப்போது ராமநாதன் மீது லாரி சக்கரம் ஏறியதால், அதே இடத்திலேயே அவர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். கருப்பாயி, கம்பன் ஆகியோர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். 
மேலும் விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் லாரியை நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து ஆத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி மற்றும்  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மனைவி, மகன் கண்முன்னே தொழிலாளி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story