மினி லாரியில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது


மினி லாரியில் ரேஷன் அரிசி  கடத்தியவர் கைது
x
தினத்தந்தி 27 Jan 2022 11:13 PM GMT (Updated: 27 Jan 2022 11:13 PM GMT)

மினி லாரியில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

நெல்லை:
நெல்லை மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி, சப் இன்ஸ்பெக்டர் சரவணபோஸ் மற்றும் போலீசார் பாவூர்சத்திரம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் வந்த ஒரு மினி லாரியை சோதனை செய்தனர். அதில் 40 மூட்டைகளில் 2000 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. உடனே அதில் இருந்த 2 பேரும் தப்பி ஓட முயன்றனர். உடனே போலீசார் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் பாவூர்சத்திரம் அருகே உள்ள மருதடியூரை சேர்ந்த கவியரசு (வயது 22) என்பதும், தப்பி ஓடியவர் நாகல்குளத்தைசேர்ந்த அருண்குமார் என்பதும், 2 பேரும் ரேஷன் அரிசி கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து கவியரசை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 2000 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய அருண்குமாரை தேடி வருகின்றனர்.

Next Story