வியாபாரியிடம் பணம் பறித்த வாலிபர் கைது


வியாபாரியிடம் பணம் பறித்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 27 Jan 2022 11:18 PM GMT (Updated: 27 Jan 2022 11:18 PM GMT)

வியாபாரியிடம் பணம் பறித்த வாலிபர் கைது

நெல்லை:
நெல்லை டவுன் வயல்தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவருடைய மகன் புவனேஷ் (வயது 21).  இவர்   கடந்த   2021-ம் ஆண்டு நெல்லை டவுனில் உள்ள ஒரு வியாபாரி கடையை அடைத்துவிட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது அவரிடமிருந்து ரூ.1300-ஐ பறித்து விட்டு சென்று விட்டார். இதுகுறித்து நெல்லை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி ஒரு வருடமாக தலைமறைவாக இருந்த புவனேசை நேற்று கைது செய்தார்.

Next Story