மாவட்ட செய்திகள்

இறப்பு விகிதத்தை அதிகரிக்கும் ‘நியோகோவ்’ புதிய வைரஸ் - விஞ்ஞானிகள் எச்சரிக்கை + "||" + 1 in 3 dies, should we worry Wuhan scientists warn of new Covid virus NeoCov with high death rate and spread says Report

இறப்பு விகிதத்தை அதிகரிக்கும் ‘நியோகோவ்’ புதிய வைரஸ் - விஞ்ஞானிகள் எச்சரிக்கை

இறப்பு விகிதத்தை அதிகரிக்கும் ‘நியோகோவ்’ புதிய வைரஸ் - விஞ்ஞானிகள் எச்சரிக்கை
தென் ஆப்பிரிக்காவில் மெர்ஸ் கோவ் என்ற நியோகோவ் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி

சீனாவின் உகான் நகரில் முதன்முதலில் 2019-ம் ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அதில் இருந்து தற்போது வரை உலக நாடுகள் நிம்மதியற்ற நிலையில் உள்ளன. அதற்கு காரணம் கொரோனா வைரஸ் தொற்றின் அடுத்தடுத்த உருமாற்றம்தான்.உருமாற்றம் அடைந்து பல அலைகளாக பரவி வரும் கொரோனாவால் உலக நாடுகள்  இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.

தொற்றைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பல்வேறு பயணக்கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இதனால், தொற்று பாதிப்பின் வீரியம் சற்று தணிந்தாலும் அச்சுறுத்தல் முழுமையாக நீங்கவில்லை. இந்த நிலையில், உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 36.64 கோடியாக உயர்ந்துள்ளது. 

கொரோனா வைரஸ் தொற்று டெல்டா, பீட்டா, காமா என உருமாற்றம் அடைந்தது. ஆனால், இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா உருமாற்றம் அடைந்த வைரஸ் முதன்முதலில் கண்டறியப்பட்ட வைரஸ் தொற்றைவிட அதிக பாதிப்பு ஏற்படுத்தக்கூடியதாக இருந்தது. அதிக உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தியது.

டெல்டா அலை ஒருவழியாக ஓய்ந்த நிலையில், ஒமைக்ரான் என்ற வைரஸ் கடந்த நவம்பர் இறுதியில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் டெல்டாவைவிட மிக அதிக அளவில் பரவும் தன்மைகொண்டதாக உள்ளது.தற்போது உலகம் முழுவதும் இந்த வைரஸ் ஆக்கிரமித்துள்ளது.

வேகமாக பரவினாலும் உயிர்ச்சேதம் அதிக அளவில் இல்லை என்பதால் உலக நாடுகள் பெருமூச்சுவிட்டன. இரண்டு டோஸ், பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் பாதுகாப்பானவர்கள் என கருதப்படுவதால், பொது முடக்கம் இல்லாமல் உலக நாடுகள் செல்கிறது.

உலக சுகாதார அமைப்பு, ஐரோப்பிய யூனியன் நாடுகள் கொரோனா வைரஸ் தொற்று முடிவுக்கு வர இருக்கிறது எனத் தெரிவித்தன.

இந்த நிலையில்தான் தென்ஆப்பிரிக்காவில் மெர்ஸ் கோவ் என்ற நியோகோவ் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாம். இந்த வைரஸ் 3-ல் ஒருவரை கொல்லும் கொடிய தன்மை கொண்டது என சீனாவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இது உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் அல்ல. திரிபு அல்லது வவ்வாலிடம் இருந்து பரவிய புது வகையான வைரசாக இருக்கலாம் எனவும் கண்டறிந்துள்ளனர். இதனால் உலக நாடுகள் அச்சம் அடைந்துள்ளன. சீனா ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தது முதற்கட்ட சோதனைதான். முழுமையாக ஆய்வுத் தகவல் வெளியான பின்னர்தான் அதன் பாதிப்பு குறித்து தெரியவரும்.

இருந்தாலும், தற்போதைய நோய் எதிர்ப்பு சக்தி இந்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தென் ஆப்பிரிக்காவில் கொரோனா அலை - தினமும் 8 ஆயிரம் பேருக்கு தொற்று
தென் ஆப்பிரிக்காவில் கடந்த 3 வாரங்களாகவே தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.
2. கர்நாடகத்தில் இன்று 103 பேருக்கு கொரோனா
கர்நாடகாவில் இன்று 103 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. சென்னையில் 28 பேர் உள்பட தமிழகத்தில் இன்று 44 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் இன்று 44 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
4. தென் ஆப்பிரிக்காவில் உள்ள மருத்துவமனையில் போலீசிடம் இருந்து துப்பாக்கியை பறித்து வெறித்தனமாக நோயாளிகளை சுட்டுக்கொன்ற நபர்!
அந்த நபர் கண்ணிமைக்கும் நேரத்தில், போலீஸ்காரரிடம் இருந்து துப்பாக்கியைப் பிடுங்கி, வெறித்தனமாக பல தடவை சுட்டுள்ளார்.
5. கர்நாடகத்தில் புதிதாக 181 பேருக்கு கொரோனா
கர்நாடகத்தில் நேற்று 191 பேருக்கு பாதிப்பு ஏற்பட்ட நிலையில் இன்று சற்று குறைந்து 181 ஆக பதிவாகியுள்ளது.