தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய 47 நிறுவனங்கள் மீது நடவடிக்கை


தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய 47 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
x
தினத்தந்தி 28 Jan 2022 2:25 PM GMT (Updated: 28 Jan 2022 2:25 PM GMT)

குடியரசு தினத்தன்று தொழிலாளர்களை வேலைக்கு அனுமதித்த 47 நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை 
குடியரசு தினத்தன்று தொழிலாளர்களை வேலைக்கு அனு மதித்த 47 நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட கலெக்டர் தெரிவித் துள்ளார்.
விடுமுறை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி, விடுத் துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-
தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினங்கள் சட்டத்தின்படி குடியரசு தினத்தன்று தேசிய விடுமுறை தினமாகும். அன்று கடைகள் மற்றும் நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட வேண்டும். 
இந்த தினத்தில் விடுமுறை அளிக்கப்படாமல் ஊழியர்களை வேலை செய்ய அனுமதிக்கப்பட வேண்டுமானால் அவர்களுக்கு வேலையளிப்பவரால் இரட்டிப்பு சம்பளம் அல்லது வேறொரு நாளில் மாற்று விடுப்பு அளிக்கப்பட வேண்டும். மேற்படி தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினத்தில் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த கடைகள் மற்றும் நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினத்தன்று 24 மணிநேரத்திற்கு முன்னதாக சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் உரிய படிவம் சமர்ப்பிக்க வேண்டும்.
நடவடிக்கை
இதன் அடிப்படையில் சிவகங்கை மவட்டத்தில் தொழிலாளர் துணை ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்களால் 26-ந் தேதி குடியரசு தினத்தன்று கூட்டாய்வு மேற்கொள்ளப் பட்டது. இந்த ஆய்வின் போது மேற்படி சட்டவிதிகளை அனுசரிக்காமல் 47 நிறுவனங்களில் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தியது கண்டறியப்பட்டது.
 இதையொட்டி, சம்பந்தப்பட்ட வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுஉள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story