கள்ளக்குறிச்சி வழியாக சென்ற குடியரசு தின விழா அலங்கார ஊர்திகள் கலெக்டர் போலீஸ் சூப்பிரண்டு பார்வையிட்டனர்

கள்ளக்குறிச்சி வழியாக சென்ற குடியரசு தின விழா அலங்கார ஊர்திகள்  கலெக்டர் போலீஸ் சூப்பிரண்டு பார்வையிட்டனர்
x
தினத்தந்தி 28 Jan 2022 4:40 PM GMT (Updated: 28 Jan 2022 4:40 PM GMT)

கள்ளக்குறிச்சி வழியாக சென்ற குடியரசு தின விழா அலங்கார ஊர்திகள் கலெக்டர் போலீஸ் சூப்பிரண்டு பார்வையிட்டனர்

கள்ளக்குறிச்சி

புதுடில்லியில் குடியரசு தினவிழா அலங்கார அணிவகுப்பில் வாய்ப்பு மறுக்கப்பட்ட தமிழ்நாடு அலங்கார ஊர்திகள் சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பங்கேற்றன. இந்திய விடுதலைப் போரில் ஆங்கிலேயர்களை தீரமுடன் எதிர்கொண்ட தமிழக சுதந்திர போராட்ட வீரர்களின் பங்களிப்பை போற்றி, பெருமைப்படுத்தும் வகையில் தமிழக அரசின் சார்பில் வடிவமைக்கப்பட்ட 3 அலங்கார ஊர்திகளும் அணிவகுப்பில் பங்கேற்றன.  பின்னர் அந்த அலங்கார ஊர்திகள் பொதுமக்களின் பார்வைக்காக  முதற்கட்டமாக கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் காட்சிப்படுத்தும் பொருட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதன்படி நேற்று கள்ளக்குறிச்சி மாவட்டம் வழியாக சென்ற அலங்கார ஊர்திகளை மாடூர் சுங்கச்சாவடியில் கலெக்டர் ஸ்ரீதர், போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் ஆகியோர் பார்வையிட்டனர். இதில் மணிக்கண்ணன் எம்.எல்.ஏ., கோட்டாட்சியர் சரவணன் மற்றும் அரசியல் கட்சியினர் கலந்துகொண்டனர்.

Next Story