நகர்புற உள்ளாட்சி தேர்தல் இட ஒதுக்கீடு தொடர்பாக கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் அமைச்சர் எ வ வேலு ஆலோசனை


நகர்புற உள்ளாட்சி தேர்தல் இட ஒதுக்கீடு தொடர்பாக கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் அமைச்சர் எ வ வேலு ஆலோசனை
x
தினத்தந்தி 28 Jan 2022 4:48 PM GMT (Updated: 28 Jan 2022 4:48 PM GMT)

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் இட ஒதுக்கீடு தொடர்பாக கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் அமைச்சர் எ வ வேலு ஆலோசனை நடத்தினார்

கள்ளக்குறிச்சி

ஆலோசனை கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை ஆகிய 3 நகராட்சிகள், சங்கராபுரம், தியாகதுருகம், சின்னசேலம், மணலூர்பேட்டை, வடக்கநந்தல் ஆகிய 5 பேரூராட்சிகளில் உள்ள பதவிகளுக்கு போட்டியிட கூட்டணி கட்சிகளுக்கு இட ஒதுக்கீடு செய்வது தொடர்பாக ஆலோசனை கூட்டம் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கினார். கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் வசந்தம்.கார்த்திகேயன் எம்.எல்.ஏ, வடக்கு மாவட்ட பொறுப்பாளர் உதயசூரியன் எம்.எல்.ஏ, உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ.மணிகண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
இதில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ், விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் தனபால் மற்றும் ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

100 சதவீதம் வெற்றி

கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு கூட்டணி கட்சிகள் போட்டியிடும் இடங்களை ஒதுக்கீடு செய்தார். பின்னர் தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அவர் தேர்வு செய்தார். 
பின்னர் அவர் கூறுகையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 3 நகராட்சிகள் மற்றும் 5 பேரூராட்சிகளில் உள்ள 153 வார்டு உறுப்பினர் பதவிகளையும் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகள் கைப்பற்ற வேண்டும். தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்த சாதனைகளை வீடு, வீடாக சென்று மக்களிடத்தில் எடுத்துக்கூறி வாக்கு சேகரிக்க வேண்டும். நிர்வாகிகள் அனைவரும் சுறு, சுறுப்பாக தேர்தல் பணியாற்றி 100 சதவீதம் வெற்றி பெற வேண்டும் என கூறினார்.

Next Story