முசிறியில் குளிக்க சென்ற போது காவிரி ஆற்றில் மூழ்கி ஆசிரியர் இறந்தார்.


முசிறியில் குளிக்க சென்ற போது காவிரி ஆற்றில் மூழ்கி ஆசிரியர் இறந்தார்.
x
தினத்தந்தி 28 Jan 2022 7:10 PM GMT (Updated: 28 Jan 2022 7:10 PM GMT)

முசிறியில் குளிக்க சென்ற போது காவிரி ஆற்றில் மூழ்கி ஆசிரியர் இறந்தார்.

முசிறி, ஜன.29-
முசிறியில் குளிக்க சென்ற போது காவிரி ஆற்றில் மூழ்கி ஆசிரியர் இறந்தார்.
தனியார் பள்ளி ஆசிரியர்
முசிறி சுந்தர் நகரை சேர்ந்தவர் சரவணன் (வயது 29). இவர் நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி  வந்தார். நேற்று முன்தினம் காலையில் சரவணன், தனது சகோதரர் உதயகுமாருடன் முசிறி காவிரி ஆற்றுக்கு குளிக்க சென்றார். அப்போது, உதயகுமார் குளித்துவிட்டு வீட்டிற்கு புறப்பட்ட நிலையில், சகோதரர் சரவணனை விரைந்து குளித்துவிட்டு வரச்சொல்லியுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் தனது தம்பி வீட்டிற்கு வராத நிலையில், அதிர்ச்சியடைந்த உதயகுமார் ஆற்றில் சென்று சரவணனை பார்த்துள்ளார். ஆற்றில் சரவணன் துவைத்து வைத்திருந்த துணி இருந்தது. ஆனால் அவரை காணவில்லை.
ஆற்றில் மூழ்கி பலி
இதனால் அதிர்ச்சியடைந்த உதயகுமார் முசிறி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில்  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சரவணனை ேதடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் கிடைக்கவில்லை.
இந்தநிலையில் நேற்று காலையில் காவிரி கரையோரம் உள்ள சுடுகாட்டில்  சரவணனின் உடல் கரை ஒதுக்கியது. அவர் குளிக்கும் போது, ஆற்றில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் முசிறி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை  நடத்தி வருகின்றனர்.

Next Story
  • chat