24 மணி நேர ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்த வேண்டும்


24 மணி நேர ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்த வேண்டும்
x
தினத்தந்தி 28 Jan 2022 8:04 PM GMT (Updated: 28 Jan 2022 8:04 PM GMT)

நம்பிவயல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை 24 மணிநேர ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரம்பயம்:
நம்பிவயல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை 24 மணிநேர ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
ஆரம்ப சுகாதார நிலையம் 
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நம்பிவயல் ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த சுகாதார நிலையத்தில் 8 படுக்கைகள் உள்ளன. மேலும் ஒரு டாக்டரும், 3 செவிலியர்களும்  பணிபுரிந்து வருகின்றனர். இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நம்பிவயல், சிவகொல்லை, வல்லம்பக்கொல்லை, வடக்குஅதம்பை, தெற்கு அதம்பை, காட்டாத்தி, உஞ்சிய விடுதி, மூனுமாங்கொல்லை, புதுவிடுதி, பாதிரங்கோட்டை, கொள்ளுக்காடு  உள்ளிட்ட பல கிராமங்களில் உள்ள பொதுமக்கள் சிகிச்சைக்காக வருகின்றனர். ஆனால் விபத்துக்கள் ஏற்பட்டால் பட்டுக்கோட்டை மற்றும் கந்தர்வக்கோட்டைக்கு கொண்டு செல்லப்பட்டு முதல் உதவி சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் கர்ப்பிணிகளை பிரசவம் பார்க்க பட்டுக்கோட்டைக்கு தான் கொண்டு செல்ல வேண்டியுள்ளது. 
தரம் உயர்த்த வேண்டும் 
எனவே  நம்பிவயலில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை 50 படுக்கைகள் கொண்ட 24 மணி நேரமும் டாக்டர் இருக்கக்கூடிய ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்த வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நம்பிவயல் ஊராட்சி மன்ற தலைவர் கல்யாணசுந்தரம், ஒன்றிய கவுன்சிலர் ரமாதேவி கரிகாலன் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story