3 வயது பெண் குழந்தை பலாத்காரம்; தொழிலாளி கைது


3 வயது பெண் குழந்தை பலாத்காரம்; தொழிலாளி கைது
x
தினத்தந்தி 28 Jan 2022 9:17 PM GMT (Updated: 28 Jan 2022 9:17 PM GMT)

உப்பள்ளியில், குடிபோதையில் 3 வயது பெண் குழந்தையை பலாத்காரம் செய்த தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

உப்பள்ளி: உப்பள்ளியில், குடிபோதையில் 3 வயது பெண் குழந்தையை பலாத்காரம் செய்த தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். 

பெண் குழந்தை பலாத்காரம்

தார்வார் மாவட்டம் உப்பள்ளி டவுன் கெண்டிகேரி பகுதியில் ஒரு தம்பதி வசித்து வருகிறார்கள். இந்த தம்பதிக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மாலை வீட்டு முன்பு குழந்தை விளையாடி கொண்டிருந்தது.

அப்போது அதேபகுதியை சேர்ந்த தொழிலாளியான கங்காதர் மாதர்(வயது 30) என்பவர் மது அருந்துவிட்டு குடிபோதையில் அங்கு வந்துள்ளார். போதையில் தள்ளாடியபடி வந்த அவர், குழந்தையிடம் நைசாக பேச்சு கொடுத்து தனியாக அழைத்து சென்றுள்ளார். அங்கு அவர், குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.   

 கைது

இதனால் குழந்தை அழுதபடி வீட்டுக்கு வந்துள்ளது. மேலும் குழந்தையின் உடலில் காயங்களும் இருந்துள்ளது. இதுபற்றி பெற்றோர் விசாரித்த போது, கங்காதர், குழந்தையை பலாத்காரம் செய்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. இந்த தகவல் அப்பகுதி முழுவதும் பரவியது. இதையடுத்து கங்காதர் மாதர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கெண்டிகேரி போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அதில் சிறுமியை, அதேபகுதியை சேர்ந்த கங்காதர் மாதர் பலாத்காரம் செய்துவிட்டு தப்பியோடியது தெரியவந்தது. இதையடுத்து அவரை, போலீசார் கைது செய்தனர். கைதான அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story