சூரிய மின் சக்தியில் செயல்படும் தானியங்கி கேமராக்கள்


சூரிய மின் சக்தியில் செயல்படும் தானியங்கி கேமராக்கள்
x
தினத்தந்தி 29 Jan 2022 2:04 PM GMT (Updated: 29 Jan 2022 2:04 PM GMT)

காட்டுத்தீ, வன குற்றங்களை கண்டறிய சூரிய மின் சக்தியில் செயல்படும் தானியங்கி கேமராக்கள், முதுமலையில் 9 இடங்களில் வனத்துைறயினர் அமைத்தனர்.

கூடலூர்

காட்டுத்தீ, வன குற்றங்களை கண்டறிய சூரிய மின் சக்தியில் செயல்படும் தானியங்கி கேமராக்கள், முதுமலையில் 9 இடங்களில் வனத்துைறயினர் அமைத்தனர்.

காட்டுத்தீ அபாயம்

முதுமலை புலிகள் காப்பகம் 688 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. காட்டுயானைகள், புலிகள், மான்கள், செந்நாய்கள், கரடிகள், காட்டெருமைகள் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இது தவிர சந்தனம், தேக்கு உள்ளிட்ட விலை உயர்ந்த மரங்களும் காணப்படுகிறது. முதுமலை கரையோரம் கர்நாடகா, கேரளா வனங்களும் உள்ளதால் வன குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க வனத்துறையினர் ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர். 

இதேபோன்று பல இடங்களில் வேட்டை தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் வன ஊழியர்கள் இரவு, பகலாக கண்காணித்து வருகின்றனர். இருப்பினும் வனப்பகுதியை முழுமையாக கண்காணிக்கும் வகையில் வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். ஆண்டுதோறும் கோடை காலத்தில் வறட்சியான காலநிலை நிலவும் சமயத்தில் காட்டுத்தீ பரவுகிறது. தாமதமாக கிடைக்கும் தகவலால் காட்டுத்தீ வேகமாக பரவி வனம் எரிந்து விடுகிறது.

உயர் கோபுர கேமராக்கள்

இந்த நிலையில் வனத்தில் காட்டுத் தீ பரவுவதை உடனடியாக கண்டறிந்து தடுக்கவும், வனப்பகுதியில் வன குற்றங்கள் நிகழாமல் தொடர்ந்து கண்காணிக்கவும் முதுமலையில் 9 இடங்களில் சூரிய மின் சக்தியில் செயல்படும் தானியங்கி உயர் கோபுர கேமராக்களை வனத்துறையினர் பொருத்தி உள்ளனர். இவை முதுமலை தெப்பக்காடு கண்காணிப்பு மையத்துடன் இணைய வழியாக இணைக்கப்பட்டுள்ளது. அங்கு கேமராக்கள் அனுப்பும் காட்சிகளை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, முதுமலை வனப்பகுதியில் சமூக விரோதிகள் நடமாட்டத்தை தடுக்க பல இடங்களில் ஏற்கனவே கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. தற்போது சூரிய மின் சக்தியில் செயல்படும் தானியங்கி கேமராக்கள் 9 இடங்களில் பொருத்தப்பட்டு உள்ளது. வேட்டை உள்பட வன குற்றங்கள் நிகழாமல் தடுக்க தானியங்கி கேமராக்கள் பயன்பாட்டு கொண்டு வரப்பட்டு இருக்கிறது என்றனர்.


Next Story