வேதாரண்யேஸ்வரர் கோவிலில் மாசிமக பெருவிழா


வேதாரண்யேஸ்வரர் கோவிலில் மாசிமக பெருவிழா
x

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் மாசிமக பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

வேதாரண்யம்:
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில்  மாசிமக பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மாசிமக பெருவிழா
வேதாரண்யத்தில் வேதாரண்யேஸ்வரர் ேகாவில் உள்ளது. இந்த ேகாவில் கீர்த்தி, மூர்த்தி, ஸ்தலம் மூன்றிலும் புகழ்பெற்றது. பல்வேறு சிறப்பு பெற்ற இந்த கோவிலில் மாசிமக பெருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கணேஷ் சிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றப்பட்டது. பின்னர் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடந்தது. 
13-ந்தேதி தேரோட்டம்
 30 நாட்கள் நடைபெறும் மாசிமக விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக திருக்கதவு அடைக்க, திறக்க பாடுதல் நிகழ்ச்சி  அடுத்த மாதம் (பிப்ரவரி) 4-ந்தேதியும், தேரோட்டம் 13-ந்தேதியும், தீர்த்தவாரி 16-ந்தேதியும், தெப்ப உற்சவம்  18-ந்தேதியும் நடைபெறுகிறது.
கொடியேற்று விழாவில் யாழ்ப்பாணம் வரணிஆதீனம் செவ்வந்திநாத பண்டார சந்நதி, கோவில் நிர்வாக அதிகாரி ஜெயச்சந்திரன், ஸ்தலத்தார்கள் கயிலைமணி வேதரெத்தினம், கேடிலியப்பன், எஸ்.கே.எம்.எஸ். குருப் குடும்பத்தினர், தேவிபாலு, ஓதுவாமூர்த்திகள் பரஞ்சோதி, ராஜேந்திரன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

Next Story