உடுமலை நகரில் குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்


உடுமலை நகரில் குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்
x
தினத்தந்தி 29 Jan 2022 4:51 PM GMT (Updated: 29 Jan 2022 4:51 PM GMT)

உடுமலை நகரில் குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்

உடுமலை:
உடுமலை நகரில் குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்றுஅப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2 குரங்குகள்
உடுமலையில் குடியிருப்பு பகுதிகளில் 2 குரங்குகள் கடந்த சில நாட்களாக சுற்றி திரிகின்றன. குரங்குகளை கண்டதும் நாய்கள் துரத்துகின்றன. அப்போது அந்த குரங்குகள் அங்குமிங்கும் தாவி குதித்து செல்கின்றன. அவை சாலையில் ஓடும்போது நாய்கள் துரத்தும் நிலையில் பொதுமக்கள் சாலையில் அச்சத்துடன் செல்கின்றனர்.
 குடியிருப்பு பகுதிகளில் உள்ளவர்கள் அந்த குரங்குகளை வேடிக்கை பார்த்தாலும், அவை கடித்துவிடுமோ என்ற அச்சமும் உள்ளது. சிலரது வீடுகளில் புகுந்து உணவுப்பொருட்களை நாசப்படுத்துகிறது.இதனால் யாரும் வீட்டை திறந்து இருக்க முடியாமல் அச்சத்துடன் கதவு,ஜன்னல்களை சாத்தி வைத்துள்ளனர்.
கூண்டு வைத்து பிடிக்கப்படுமா?
இந்த நிலையில் நேற்று நகராட்சி அலுவலகம் உள்ள கமிஷனர் சுப்பையா வீதியில் உள்ள குடியிருப்புகளில்சுற்றித்திரிந்த 2 குரங்குகளையும் நாய்கள் துரத்தியதால் அந்த குரங்குகள் நகராட்சி பழைய அலுவலக கட்டடப்பகுதிக்குள் புகுந்தது. 
இந்த குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து உடுமலை வனப்பகுதியில் கொண்டு போய் விடவேண்டும் என்று அப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story