விழுப்புரம் அருகே வீடு புகுந்து திருடிய வாலிபர் கைது


விழுப்புரம் அருகே வீடு புகுந்து திருடிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 29 Jan 2022 5:00 PM GMT (Updated: 29 Jan 2022 5:00 PM GMT)

விழுப்புரம் அருகே வீடு புகுந்து திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டாா்.


விழுப்புரம், 

விழுப்புரம் அருகே ஆயந்தூர் பஸ் நிறுத்தம் அருகில் நேற்று காணை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த காளியப்பன் மகன் கிருஷ்ணன் (வயது 19) என்பதும், 

கடந்த ஆண்டு ஜூன் மாதம் விழுப்புரம் மாம்பழப்பட்டு ரெயில்வே கேட் அருகில் உள்ள சித்ரா என்பவரின் வீட்டு பூட்டை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த பணம், பொருட்களை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து கிருஷ்ணனை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த ரூ.1,500 ரொக்கம், ஒரு மடிக்கணினி, ஒரு செல்போன், ஏ.டி.எம். கார்டு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 

பின்னர் கிருஷ்ணனை விழுப்புரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி வேடம்பட்டில் உள்ள சிறையில் அடைத்தனர்.

Next Story