செம்மண் கடத்திய 5 வாகனங்கள் பறிமுதல்


செம்மண் கடத்திய 5 வாகனங்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 29 Jan 2022 5:36 PM GMT (Updated: 2022-01-29T23:06:53+05:30)

செம்மண் கடத்திய 5 வாகனங்கள் பறிமுதல்

குழித்துறை, 
மார்த்தாண்டம் அருகே பாகோடு ஆலுவிளையில் அனுமதி இல்லாமல் வாகனங்களில் செம்மண் கடத்தப்படுவதாக மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று காலையில் மார்த்தாண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்குமார் தலைமையிலான போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு பொக்லைன் எந்திரம் மூலம் 2 டெம்போக்களில் செம்மண் ஏற்றிக்கொண்டு இருந்தன. மேலும் 2 டெம்போக்கள் செம்மண் ஏற்றுவதற்காக தயார் நிலையில் நின்றன. இதையடுத்து போலீசார் 4 டெம்போக்களையும், பொக்லைன் எந்திரத்தையும் பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். மேலும் இதுதொடர்பாக போலீசாரிடம் சிக்கிய ஒருவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story