ரூ.22½ லட்சத்தில் புதிய ஊராட்சிஅலுவலகம் கட்டும் பணி


ரூ.22½ லட்சத்தில் புதிய ஊராட்சிஅலுவலகம் கட்டும் பணி
x
தினத்தந்தி 29 Jan 2022 5:38 PM GMT (Updated: 29 Jan 2022 5:38 PM GMT)

திருவாரூர் அருகே பழையவலத்தில் ரூ.22½ லட்சத்தில் புதிய ஊராட்சிஅலுவலகம் கட்டும் பணியை கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

திருவாரூர்;
திருவாரூர் அருகே பழையவலத்தில் ரூ.22½ லட்சத்தில் புதிய ஊராட்சிஅலுவலகம் கட்டும் பணியை கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.
ஊராட்சி அலுவலகம்
திருவாரூர் ஒன்றியம் பழையவலம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.22 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பில் புதிய ஊராட்சி  அலுவலகம் கட்டுவதற்கான முதற்கட்ட பணிகளை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது
திருவாரூர் மாவட்டத்தில் ஊராட்சி அளவில் சாலை, குடிநீர் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கிராம ஊராட்சிகளில் உள்ள மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
 ஆய்வு
திருவாரூர் ஒன்றியம் பழையவலம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.22.65 லட்சம் மதிப்பில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டுவதற்கான முதற்கட்ட பணிகள் ஆய்வு செய்யப்பட்டது. பணிகளை தரமாக மேற்கொள்ள பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்  கூறினார்
ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் செயற்பொறியாளர் சடையப்பன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் புவனேஸ்வரி, பாஸ்கர் ஆகியோர் இருந்தனர்.

Next Story