தெருவில் விளையாடி கொண்டிருந்த சிறுவர்களை வெறிநாய் கடித்து குதறியது


தெருவில் விளையாடி கொண்டிருந்த சிறுவர்களை வெறிநாய் கடித்து குதறியது
x
தினத்தந்தி 29 Jan 2022 5:57 PM GMT (Updated: 29 Jan 2022 5:57 PM GMT)

ஆரணியில் ெதருவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் உள்பட 4 பேரை வெறிநாய் கடித்துக்குதறியது. அவர்கள் மருத்துவமனையில் ேசர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆரணி

ஆரணியில் ெதருவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் உள்பட 4 பேரை வெறிநாய் கடித்துக்குதறியது. அவர்கள் மருத்துவமனையில் ேசர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடித்து குதறியது

ஆரணி நகரில் பல்வேறு தெருக்களில் நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. நேற்று மாலை புதுகாமூர் பகுதியில் வெறி நாய் ஒன்று சுற்றித்திரிந்தது. 

அந்தத் தெருவில் விளையாடிக்கொண்டிருந்த ஜெயராமனின் மகன் அரீஷ் (வயது 8), வெங்கடேசனின் மகன் கிஷோர் (14), தர்மராஜா கோவில் தெருவைச் சேர்ந்த பாலமுருகனின் மகன் அஸ்வின் (5) மற்றும் சிவன் கோவிலில் நடந்த சனிப்பிரதோஷ விழாவில் பங்கேற்க வந்தவரும் பக்தருமான ஆகாரம் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை (42) உள்பட பலரை வெறிநாய் குடித்துக் குதறியது.

இதையறிந்த அங்கிருந்தவர்கள் வெறி நாயை விரட்டினர். அந்த நாய் தப்பியோடி விட்டது. வெறி நாய் கடித்து படுகாயம் அடைந்த 4 பேரும் ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கருத்தடை ெசய்ய வேண்டும்

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ஆரணியில் தெருவுக்கு 20 நாய்கள் சுற்றித்திரிகின்றன. அதில் ஒருசில நாய்கள் இரவில் வருவோர், போவோரை விரட்டி கடிக்க வருகின்றன. 

இதனால் வாகனங்களில் வருவோரும், நடந்து செல்வோரும் அச்சப்படுகிறார்கள். அந்த நாய்கள் சாலையின் நடுவே படுத்துள்ளன. 

மக்கள் தான் ஒதுங்கி செல்ல வேண்டி உள்ளது. சிறுவர், சிறுமிகள் தெருவில் விளையாடினால் வெறி நாய்கள் கடிக்க வருகின்றன.

நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, நாய்களுக்கு கருத்தடை செய்ய வேண்டும், என்றனர்.

Next Story