தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 29 Jan 2022 7:38 PM GMT (Updated: 29 Jan 2022 7:38 PM GMT)

தஞ்சை மாவட்டத்தில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.

கழிவுகள் அகற்றப்படுமா?
தஞ்சை மாவட்டம் திருவையாறு தாலுகா கண்டியூர் ஊராட்சிக்கு உட்பட்ட  கண்டியூர் முதல் கும்பகோணம் செல்லும் சாலையில் பிளாஸ்டிக் பொருட்கள், இறைச்சி கழிவுகளை கொட்டி வருகின்றனர். இதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இறைச்சி கழிவுகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து கொட்டப்படும் கழிவுகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
பொதுமக்கள், கண்டியூர். 
பிளாஸ்டிக் கழிவுகளை எரிக்கும் அவலம் 
தஞ்சை பர்மா காலனி வழியாக விளார் செல்லும் சாலையில் நாவலர் நகர் அமைந்துள்ளது. இந்த தெருவில் பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்தாமல் தீயிட்டுக் கொளுத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியை சேர்ந்தவர்களுக்கு சுவாசக் கோளாறு ஏற்படுகிறது. இதனால் சிறுவர்,  சிறுமிகள் மற்றும் குழந்தைகள் பாதிக்கப் படுகிறார்கள். தீயிட்டு கொளுத்துவதால் சாலையில் புகைமூட்டம் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பிளாஸ்டிக் கழிவுகளை எரிக்காமல் குப்பைகளை தரம் வாரியாக பிரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்கள் கோரிக்கையாகும்.  
பொதுமக்கள், நாவல்நகர். 

Next Story
  • chat