சீர்காழியில் அ.தி.மு.க. வார்டு செயலாளர்கள் கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் பங்கேற்றார்.

சீர்காழியில் அ.தி.மு.க. வார்டு செயலாளர்கள் கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் பங்கேற்றார்.
x
தினத்தந்தி 29 Jan 2022 8:22 PM GMT (Updated: 29 Jan 2022 8:22 PM GMT)

சீர்காழியில் அ.தி.மு.க. வார்டு செயலாளர்கள் கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் பங்கேற்றார்.

சீர்காழி:
சீர்காழியில் அ.தி.மு.க. வார்டு செயலாளர்கள் கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் பங்கேற்றார்.
கூட்டம்
சீர்காழியில் நகர அ.தி.மு.க. வார்டு செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் பாரதி தலைமை தாங்கினார். கட்சி நிர்வாகிகள் மணி, பக்கிரிசாமி, வக்கீல் நெடுஞ்செழியன், பரணிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர கழக செயலாளர் வினோத் வரவேற்று பேசினார். கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பவுன்ராஜ், மாவட்ட துணை செயலாளர் செல்லையன் ஆகியோர் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து பேசினார். 
தொடர்ந்து அதிகளவில் உறுப்பினர் சேர்ப்பது 24 வார்டுகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற பாடுபடுவது. கடந்த 10 ஆண்டுகளில் அ.தி.மு.க. ஆட்சியில் செய்த சாதனைகளை வீடு வீடாக எடுத்து சென்று கூறி வாக்குகள் சேகரிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன், கட்சி நிர்வாகிகள் சுரேஷ், மதிவாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story