சிவன் கோவில்களில் சனி பிரதோஷ வழிபாடு


சிவன் கோவில்களில் சனி பிரதோஷ வழிபாடு
x
தினத்தந்தி 29 Jan 2022 8:48 PM GMT (Updated: 29 Jan 2022 8:48 PM GMT)

மதுரையில் உள்ள சிவன் கோவில்களில் சனி பிரதோஷ வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மதுரை,

மதுரையில் உள்ள சிவன் கோவில்களில் சனி பிரதோஷ வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பிரளயநாதர் கோவில்

மதுரை முக்தீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு நடந்தது. இதைெயாட்டி நந்தி பெருமானுக்கு சிறப்பு பூஜை நடந்தது. சுவாமி-அம்பாள் கோவிலில் திருவீதி உலா வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ேசாழவந்தான் பிரளய நாதர் கோவிலில் நேற்று சனிப்பிரதோஷ வழிபாடு நடந்தது. இதையொட்டி நந்திபெருமானுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து புதிய பட்டாடை சாத்தி, மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டன. பின்னர் மூலவர் பிரளயநாதருக்கும் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து ெகாண்டு சாமி தரிசனம் செய்தனர். அதன்பின்னர் ரிஷப வாகனத்தில் சுவாமியும், அம்பாளும் எழுந்தருளி கோவில் வளாகத்தில் திருவீதி உலா வந்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை. எம்.வி.எம். குழுமம் தலைவர் மணிமுத்தையா, நிர்வாகி வள்ளியம்மாள், தாளாளர் மருதுபாண்டியன், பிரதோஷ கமிட்டியினர், தக்கார் இளமதி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
பாலமேடு பஸ் நிலையம் அருகில் உள்ள சிவன் கோவிலில் சனி பிரதோஷ பூஜைகள் நடந்தது. இதில் சுவாமிக்கு பால், பன்னீர், தீர்த்தம், விபூதி, சந்தனம், வில்வ இலை உள்பட பல்வேறு அபிஷேகங்கள், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது, இதற்கான ஏற்பாடுகளை பாலமேடு கிராம பொது மகாலிங்க சுவாமி மடத்துகமிட்டி நிர்வாகிகள் செய்திருந்தனர்,

முக்தீஸ்வரர் கோவில்

திருமங்கலம் அருகே உள்ள ராயபாளையம் முக்திநிலையத்தில் முக்தீஸ்வரருக்கு சனி பிரதோஷ விழா நடைபெற்றது. இதில் முக்தீஸ்வரர் சன்னிதானத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள் அனைவரும் கலந்துகொண்டு லிங்கத்திற்கு பூஜை செய்து அருள்பெற்றுச் சென்றனர். 
இதை ேபால் மதுரை இம்மையில் நன்மை தருவார் ேகாவில், திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோவில், மன்னாடிமங்கலம் மீனாட்சிசுந்தரேசுவரர் கோவில், சோழவந்தான் பேட்டை அருணாசல ஈசுவரர் கோவில், திருவளவயநல்லூர் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், விக்கிரமங்கலம் கோவில்பட்டி மருததோய ஈசுவரமுடையார் கோவில், வாடிப்பட்டி அருகே குலசேகரன்கோட்டையில் உள்ள மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், குட்லாடம்பட்டியில் கொட்டமடக்கி கண்மாய் கரையில் 36 அடி உயர லிங்க வடிவிலான அண்ணாமலையார் கோவில் ஆகிய கோவில்களில் சனி பிரதோஷ விழா நடந்தது.

Next Story