ஆசனூர் அருகே ஊருக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்- பொதுமக்கள் பீதி


ஆசனூர் அருகே ஊருக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்- பொதுமக்கள் பீதி
x
தினத்தந்தி 29 Jan 2022 8:50 PM GMT (Updated: 29 Jan 2022 8:50 PM GMT)

ஆசனூர் அருகே ஊருக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்ததால் பொதுமக்கள் பீதியடைந்தார்கள்.

தாளவாடி
ஆசனூர் அருகே ஊருக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்ததால் பொதுமக்கள் பீதியடைந்தார்கள். 
யானைகள்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட ஆசனூர் வனச்சரகத்தில் ஏராளமான யானை, சிறுத்தை, புலி, மான், காட்டெருமை போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. யானைகள் அவ்வப்போது காட்டை விட்டு வெளியேறி விவசாய தோட்டங்களுக்குள் புகுந்து நாசம் செய்வது தொடர்கதையாகி வருகிறது. இந்தநிலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 2 யானைகள் ஆசனூர் அடுத்த அரேபாளையம் கிராமத்துக்குள் புகுந்தன.
விரட்டினார்கள்...
மேலும் மாதப்பா என்பவரின் வீட்டின் மதில் சுவரை தாண்டி அங்கு இருந்து மாட்டு தீவனத்தை தின்றன. இதேபோல் ஜடையன், வீராசாமி, கீதா ஆகியோரின் வீடுகளில் முன் இருந்த கழிவறை தொட்டி, தடுப்பு சுவர்களை சேதப்படுத்தின. அதன்பின்னர் கிராமமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தீப்பந்தம் காட்டியும், ஒலி எழுப்பியும் அதிகாலை 5 மணியளவில் யானைகளை காட்டுக்குள் விரட்டினார்கள். அடிக்கடி யானைகள் ஊருக்குள் வந்துவிடுவதால் யானைகள் வெளியேறும் இடத்தில் அகழி அமைக்கவேண்டும் என்று கிராமமக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளார்கள். 

Next Story