சென்னை மாநகர பஸ் சக்கரத்தில் சிக்கி பயணி சாவு


சென்னை மாநகர பஸ் சக்கரத்தில் சிக்கி பயணி சாவு
x
தினத்தந்தி 30 Jan 2022 9:39 AM GMT (Updated: 30 Jan 2022 9:39 AM GMT)

சென்னை மாநகர பஸ் சக்கரத்தில் சிக்கி பயணி பரிதாபமாக இறந்தார்.

சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி பஸ் நிறுத்தத்தில் 50 வயது மதிக்கத்தக்க நபர் நேற்று முன்தினம் இரவு திருவொற்றியூரில் இருந்து பூந்தமல்லி செல்லும் மாநகர பஸ்சில் (தடம் எண்: 101) ஏற முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக கால் தடுமாறி கீழே விழுந்த அவர் மீது பஸ்சின் பின்பக்க சக்கரம் ஏறி இறங்கியது. இதில் அவர் தலை நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வுபிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து பலியான அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என விசாரித்து வருகின்றனர்.

Next Story
  • chat