தொழிற்சங்கத்தினர் தெருமுனைப் பிரச்சாரம்


தொழிற்சங்கத்தினர் தெருமுனைப் பிரச்சாரம்
x
தினத்தந்தி 30 Jan 2022 12:47 PM GMT (Updated: 30 Jan 2022 12:47 PM GMT)

தொழிற்சங்கத்தினர் தெருமுனைப் பிரச்சாரம்

கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறிகளுக்கு அறிவித்த கூலி உயர்வை அமுல்படுத்த கோரியும், 2 லட்சம் விசைத்தறியாளர்களின் குடும்ப வாழ்வாதாரம் காக்கா கோரியும், கடந்த 8 ஆண்டுகளாக கூலி உயர்வு வழங்க மறுக்கும் ஜவுளி உற்பத்தியாளர்களை கண்டித்தும் மாவட்ட முழுவதும் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் நேற்று சிஐடியு, ஏஐடியூசி, ஐஎன்டியூசி, ஏடிபி, எம் எல்எப், எல்பிஎப், உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் வஞ்சிபாளையம், கணியாம்பூண்டி, வெங்கமேடு, கவுண்டம்பாளையம், கருணைபாளையம், வேலாயுதம்பாளையம், ஆட்டையாம்பாளையம், தெக்கலூர் உள்ளிட்ட இடங்களில் தெருமுனைப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். 

---

Next Story