வாரச்சந்தை பகுதியில் தேங்கி நிற்கும் கழிவு நீர்


வாரச்சந்தை பகுதியில் தேங்கி நிற்கும் கழிவு நீர்
x
தினத்தந்தி 30 Jan 2022 1:50 PM GMT (Updated: 30 Jan 2022 1:50 PM GMT)

வாரச்சந்தை பகுதியில் தேங்கி நிற்கும் கழிவு நீர்

சோமவாரப்பட்டி வாரச்சந்தை பகுதியில் சாக்கடை நீர் தேங்கி கிடப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த சாக்கடை நீரை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
வாரச் சந்தை
குடிமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்டது சோமவாரப்பட்டி ஊராட்சி. சோமவாரப்பட்டியில் வாரந்தோறும் வியாழக்கிழமை வாரச்சந்தை இயங்கி வருகிறது. சோமவரப்பட்டியை சுற்றிலும் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
இதனால் இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் சாகுபடி செய்யப்படும் காய்கறிகளை சந்தையில் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். சோமவாரப்பட்டியில் ரூ.40 லட்சம் செலவில் கடைகள் மற்றும் அனைத்து வசதிகளுடன் கூடிய சந்தை கட்டப்பட்டுள்ளது.
சுகாதார சீர்கேடு
சோமவாரப்பட்டி வாரச்சந்தைக்கு அதிக அளவில் மக்கள் வந்து செல்லும் நிலையில் சந்தைக்கு அருகில் திறந்தவெளியிலும் கடைகள் செயல்பட்டு வருகின்றன. சந்தைக்கு எதிரே சாக்கடை நீர் செல்ல வழியில்லாமல் தேங்கி கிடக்கிறது. சாக்கடை நீர் ரோட்டில் செல்வதால் இப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.
எனவே சந்தைற்றியுள்ள பகுதிகளில் சாக்கடை நீர் தேங்காத வகையில் சாக்கடை நீர் செல்லும் வகையில நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story