ஆதிகாமாட்சி அம்மன் கோவிலில் விடையாற்றி விழா


ஆதிகாமாட்சி அம்மன் கோவிலில் விடையாற்றி விழா
x
தினத்தந்தி 30 Jan 2022 2:57 PM GMT (Updated: 30 Jan 2022 2:57 PM GMT)

ஆதிகாமாட்சி அம்மன் கோவிலில் விடையாற்றி விழா நடந்தது

நன்னிலம்:-

நன்னிலம் அருகே மூங்கில்குடியில் உள்ள ஆதிகாமாட்சி அம்மன் கோவிலில் கடந்த 27-ந் தேதி குடமுழுக்கு நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் ஆதிகாமாட்சி அம்மன் உற்சவர் வீதி உலா நடைபெற்றது. இதன் முடிவில் அம்மன் கோவில் மண்டபத்தில் எழுந்தருளினார். இந்த நிலையில் நேற்று விடையாற்றி விழா நடந்தது. அப்போது அம்மன் கோவிலுக்குள் உள்ள அர்த்தமண்டபத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர். 

Next Story