தேர்தல் நடத்தை விதிமுறையை மீறி தே.மு.தி.க. சார்பில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் அகற்றம்


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 30 Jan 2022 5:23 PM GMT (Updated: 2022-01-30T22:53:18+05:30)

தேர்தல் நடத்தை விதிமுறையை மீறி தே.மு.தி.க. சார்பில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் அகற்றப்பட்டது.

குளித்தலை
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து குளித்தலை நகராட்சி பகுதியில் கட்சியினர் சார்பில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள், நடப்பட்டிருந்த கட்சிக் கொடிக்கம்பங்கள், தலைவர்களின் படங்கள், கட்சி கல்வெட்டுகள் ஆகியவற்றை அகற்றும் மற்றும் மறைக்கும் பணியிலும் குளித்தலை நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று 16-வது வார்டில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளரின் பெயர் மற்றும் அக்கட்சி தலைவர்கள் பொறுப்பாளர்கள் புகைப்படங்கள் அடங்கிய சுவரொட்டிகள் குளித்தலை சுங்ககேட், அண்ணா சமுதாய மன்றம், காவேரி நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்தது. இதை அறிந்த நகராட்சி அதிகாரிகள் போலீசாரின் உதவியுடன் அந்த சுவரொட்டிகளை  அகற்றினர். தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி ஒட்டப்பட்ட சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story