தனுஷ்கோடியில் குவிந்த சுற்றுலா பயணிகள்


தனுஷ்கோடியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 30 Jan 2022 5:37 PM GMT (Updated: 30 Jan 2022 5:37 PM GMT)

தனுஷ்கோடியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

ராமேசுவரம், 
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 3 வாரத்திற்கு மேலாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலில் இருந்தது.
அதுபோல் கொரோனா பரவல் குறைந்ததன் எதிரொலியாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டு அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டதால் ராமேசுவரம் கோவிலுக்கு ஞாயிற்றுக்கிழமையான நேற்று வழக்கம்போல் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். இவ்வாறு வந்த பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி விட்டு சாமியை தரிசனம் செய்தனர்.  அதுபோல் கடந்த 3 வாரத்திற்கு மேலாக இருந்த ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்ட நிலையில் தனுஷ்கோடி பகுதியிலும் நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.
குறிப்பாக அரிச்சல்முனை சாலை மற்றும் கடற்கரை பகுதியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்ததுடன் இரண்டு கடல் சேரும் இடத்தையும் பார்த்து ரசித்து சென்றனர்.

Next Story