சிறுமியை கர்ப்பிணியாக்கிய தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது


சிறுமியை கர்ப்பிணியாக்கிய தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 30 Jan 2022 6:16 PM GMT (Updated: 30 Jan 2022 6:16 PM GMT)

மயிலாடுதுறையில் சிறுமியை கா்ப்பிணியாக்கிய தொழிலாளியை போலீசாா் போக்சோ சட்டத்தில் கைது செய்தனா்.

மயிலாடுதுறை:
மயிலாடுதுறையில் சிறுமியை  கா்ப்பிணியாக்கிய தொழிலாளியை  போலீசார் போக்சோ சட்டத்தில் கைது  செய்தனர்.
தொழிலாளி கைது
மயிலாடுதுறை அருகே கீழபட்டமங்கலம் தெற்கு தெருவை சேர்ந்த கலியபெருமாள் மகன் சந்திரமூர்த்தி (வயது 34). கூலித் தொழிலாளியான இவர், கடந்த 5 மாதத்திற்கு முன்பு அருகில் உள்ள ஊரில் காம்பவுண்ட் சுவர் அமைக்கும் வேலை செய்து வந்துள்ளார். அப்போது அவர், அந்த பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் அந்த சிறுமி வீட்டில் மயங்கி விழுந்துள்ளார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த போது சிறுமி 4 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து சிறுமியின் தாய், மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதா மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து சந்திரமூர்த்தியை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story
  • chat