களம்பூர் அருகே குட்டையில் மூழ்கி 2 வயது குழந்தை சாவு


களம்பூர் அருகே குட்டையில் மூழ்கி 2 வயது குழந்தை சாவு
x
தினத்தந்தி 30 Jan 2022 6:30 PM GMT (Updated: 30 Jan 2022 6:30 PM GMT)

களம்பூர் அருகே 2 வயது குழந்தை குட்டையில் மூழ்கி இறந்தது.

ஆரணி

களம்பூரை அடுத்த வடமாதிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக். சென்னையில் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 24). இவர் வடமாதிமங்கலம் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டில் தனது 2 வயது குழந்தை பூஜேஸ் ரிஸ்வஸ்த்துடன் வசித்து வருகிறார். 

நேற்று காலை குழந்தை பூஜேஸ் ரிஸ்வஸ்த் விளையாடிக் கொண்டு இருந்தபோது மாயமாகி விட்டான். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் இதுகுறித்து களம்பூர் போலீசில் விஜயலட்சுமி புகார் செய்தார். 

இந்த நிலையில் இரவு 7.30 மணியளவில் வீட்டின் பின்புறமுள்ள குட்டையில் குழந்தை பிணமாக கிடந்தது. விளையாடி கொண்டிருந்தபோது குட்டையில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி குழந்தை இறந்து தெரிய வந்தது. 

இதையடுத்து போலீசார் குழந்தையின் பிணத்தை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் விநாயகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Next Story