நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்து நாசம்


நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்து நாசம்
x
தினத்தந்தி 30 Jan 2022 7:33 PM GMT (Updated: 30 Jan 2022 7:33 PM GMT)

விருதுநகர் அருகே நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்து நாசமானது.

விருதுநகர், 
திருத்தங்கல்லை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 47), வடமலாபுரத்தை சேர்ந்த பெருமாள்சாமி என்பவரின் கார் டிரைவராக நாகராஜ் உள்ளார். பெருமாள்சாமி கூறியதின் பேரில் இவர் பெத்து ரெட்டியப்பட்டியை சேர்ந்த மாரியப்பன் என்பவரை சிவகாசிக்கு தனது காரில் அழைத்து சென்று விட்டு மீண்டும் அவரை பெத்து ரெட்டியப்பட்டியில் விடுவதற்காக காரை ஓட்டி வந்தார். அப்போது சோரம்பட்டி கிராமத்தில் உள்ள ெரயில்வே பாலம் அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென காரில் தீப்பிடித்தது. காரில் இருந்த மாரியப்பனும், டிரைவர் நாகராஜும் காரிலிருந்து வெளியே வந்தனர். கார் முழுவதுமாக எரிந்து நாசமாகியது. இதுபற்றி நாகராஜ் கொடுத்த புகாரின் பேரில் வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

Next Story