கண்களில் மிளகாய் பொடி தூவி ெதாழிலாளியை அடித்துக்கொன்ற மனைவி கள்ளக்காதலியை வீட்டுக்கு அழைத்து வந்ததால் ஆத்திரம்


கண்களில் மிளகாய் பொடி தூவி ெதாழிலாளியை அடித்துக்கொன்ற மனைவி கள்ளக்காதலியை வீட்டுக்கு அழைத்து வந்ததால் ஆத்திரம்
x
தினத்தந்தி 30 Jan 2022 9:13 PM GMT (Updated: 30 Jan 2022 9:13 PM GMT)

கள்ளக்காதலியை வீட்டுக்கு அழைத்து வந்த தொழிலாளியை அவரது மனைவியே கண்களில் மிளகாய் பொடி தூவி அடித்துக் கொலை செய்தார்

செங்கோட்டை:
செங்கோட்டை அருகே கள்ளக்காதலியை வீட்டுக்கு அழைத்து வந்த தொழிலாளியை அவரது மனைவியே கண்களில் மிளகாய் பொடி தூவி அடித்துக் கொலை செய்தார். 
கட்டிட தொழிலாளி
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள திருமலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 40), கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி நாச்சியார் (35). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
முருகனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதாகவும் கூறப்படுகிறது. 
கள்ளக்காதலியை அழைத்து வந்தார்
இந்த நிலையில் நேற்று முன்தினம் முருகன் தனது வீட்டிற்கு திடீரென்று தனது கள்ளக்காதலியை அழைத்து வந்தார். இதனால் கோபம் அடைந்த நாச்சியார், முருகனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 
மேலும் அந்த பெண்ணுக்கும், நாச்சியாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பானது. அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து சமாதானப்படுத்தி அந்த பெண்ணை அனுப்பி வைத்தனர்.
அடித்துக் கொலை
பின்னர் இரவில் முருகன் மது அருந்திவிட்டு தனது வீட்டிற்கு வந்தார். அப்போது அவர் தனது மனைவி நாச்சியாருடன் மீண்டும் தகராறில் ஈடுபட்டார். தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த நாச்சியார் வீட்டில் இருந்த மிளகாய் பொடியை எடுத்து முருகனின் கண்களில் தூவினார். இதில் அவர் நிலைதடுமாறினார். 
மேலும் ஆத்திரம் அடங்காத நாச்சியார் கீழே கிடந்த கட்டையால் தனது கணவர் என்றும் பாராமல் முருகனை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
மனைவி கைது
இதுகுறித்து உடனடியாக செங்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் சின்னத்துரை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். முருகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
இந்த சம்பவம் தொடர்பாக இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர் வழக்குப்பதிவு செய்து, நாச்சியாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
செங்கோட்டை அருகே கண்களில் மிளகாய் பொடி தூவி தொழிலாளியை அவரது மனைவியே அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story